top of page

      உபநிஷதத்தின் தமிழ் விளக்கத்தினைப் படிக்க மற்றும் பதிவிறக்கம் செய்ய  இந்த கோப்பைத் திற்க்கவும்.

கடோபநிஷதம்

வேதவ்யாச பகவான் வேதங்களை பிரித்தளித்த போது, அந்த வேதங்களைப் பல்வேறு சாகைகளாகப் பிரித்துள்ளார். ஒவ்வொரு சாகையும் ஒரு வேதம் என்றே சொல்லுமளவிற்கு அவற்றின் கட்டமைப்பு உள்ளது. நச்சினார்க்கினியர் எனும் உரையாசிரியர் தொல்காப்பியத்திற்கான தனது உரையில தமிழ் தேசத்தில் வழங்கிவந்த சாகைகளையே வேதங்கள் எனக் குறிப்பிடுகின்றார்.

 

      அவ்வாறு பகுத்தளிக்கப்பட்டவை மொத்தம் 1133 சாகைகள் என சான்றோர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் பல சாகைகள் வழக்கொழிந்துப் போய், தற்போது ஏறக்குறைய 6 சாகைகளே வழக்கில் உள்ளன. அவ்வாறுள்ள யஜுர் வேத தைத்திPய சாகையில் வரும் உபநிடதம் இது.

 

      இந்த உபநிடதமும் மற்றவற்றைப் போலவே ‘பிரம்ம ஞானம்’ எனும் ‘ஞானமடைதலுக்கு’ – மரணமற்ற பெருவாழ்விற்கு வழி காட்டுவதே, மனித குலமே அஞ்சி நிற்கும் மரணத்தை அச்சமின்றி எதிர்கொள்ளும் நசிகேதன் என்ற சிறுவன், மரணத்தால் - மரண தேவனால் - உபதேசிக்கப்பட்டு, தன் சிரத்தையாலும் முயற்சியாலும் மரணத்தை வென்ற கதைதான் இந்த உபநிஷதம்.

 

        வார்த்தைகளாக அல்லாமல் வாழக்கையாக உபநிஷதக் கருத்துக்களை ஏற்பவன் சத் சித் ஆனந்தத்தில் மூழ்கி, சத் சித் ஆனந்தத்தில் கலந்து, சத் சித் ஆனந்தமயமாகி, வாழ்வில் பிரம்மானந்தை அடைய பரப்பிரம்மம் எனும் ஆதார சக்தி அருள் புரிவதாக.

bottom of page