top of page

 इति उपनिषत संस्क्रुत रुपम्

        உபநிஷதத்தின் தமிழ் விளக்கத்தினைப் படிக்க மற்றும் பதிவிறக்கம் செய்ய  இந்த கோப்பைத் திற்க்கவும்

Dear Reader, Please click open this PDF document to read this Upanishad with my commentary in English 

மாண்டூக்ய  உபநிஷதம் - ஒரு அறிமுகம்.

 

      வேதவ்யாச பகவான் வேதங்களை பிரித்தளித்த போது> அந்த வேதங்களைப் பல்வேறு சாகைகளாகப் பிரித்துள்ளார். ஒவ்வொரு சாகையும் ஒரு வேதம் என்றே சொல்லுமளவிற்கு அவற்றின் கட்டமைப்பு உள்ளது. நச்சினார்க்கினியர் எனும் உரையாசிரியர் தொல்காப்பியத்திற்கான தனது உரையில  தமிழ் தேசத்தில் வழங்கிவந்த சாகைகளையே வேதங்கள் எனக் குறிப்பிடுகின்றார்.

 

      அவ்வாறு பகுத்தளிக்கப்பட்டவை மொத்தம் 1133 சாகைகள் என சான்றோர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் பல சாகைகள் வழக்கொழிந்துப் போய்> தற்போது ஏறக்குறைய 6 சாகைகளே வழக்கில் உள்ளன.

 

      வேதங்களில் அதர்வண வேதம் ‘மக்கள் வேதம்’ என்று போற்றப்படும் அளவிற்கு உலகியல் வாழ்க்கைத் தேவைகளைப் பற்றிப் பேசுவது. இந்த அதர்வண வேதம் அதர்வ-அங்கிரஸ வேதம் என்றும் குறிப்பிடப்படுகிறது. பிரம்மதேவனின் மூத்த மகனான அதர்வர் இந்த வேதத்தைத் தந்தருளியுள்ளார். இவர் ‘அக்னி’ அதாவது நெருப்பை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் என்று ரிக்வேதம் புகழ்கிறது.

 

      அப்படிப்பட்ட அதர்வ-அங்கிரஸ வேதத்தின் பல சாகைகளில் இன்று கிடைத்திருப்பது ‘சௌனக சாகை’ என்ற ஒன்று மட்டுமே. அந்த சாகையில் ஐந்து உபநிஷதங்கள் உள்ளன. இருந்தாலும் அவற்றில் மூன்று உபநிஷதங்கள் முக்கியமானவையாக கருதப்படுகின்றன. முண்டக> மாண்டூக்ய> ப்ரச்ண எனும் அந்த உபநிஷதங்களில் இரண்டாவதான மாண்டூக்ய உபநிஷதம் இது.

 

      அளவில் மிகச் சிறியதாக 12 மந்திரங்களையே கொண்டதாக இருந்தாலும் இது தரும் வழிகாட்டுதல் அற்புதமானது. ஓம் எனும் ஓரெழுத்து மந்திரத்தைக் கொண்டே பல தியான நுட்பங்களைக் காட்டிக்கொடுக்கிறது. தியானத்திற்கும் ஞானத்திற்கும் தகுதிகளை வரையறுக்காமல்> சாதாரண மனிதனை அவன் இருக்கும் நிலையிலிருந்து உயர்த்த முற்படுவது இந்த உபநிஷதத்தி;ன் சிறப்பாகும்.

 

 வாருங்கள், நீரிலும் நிலத்திலும் வாழத் தெரிந்த தவளை போல் எந்த நிலையிலுள்ள மனிதனையும் கைத்தூக்கிவிடக் காத்திருக்கும் (மாண்டூக்யம் என்றால் தவளை என்று பொருள்) மாண்டூக்ய உபநிஷதச் சோலைக்குள் நுழைவோம்.

 

வார்த்தைகளாக அல்லாமல் வாழக்கையாக உபநிஷதக் கருத்துக்களை ஏற்பவன் சத் சித் ஆனந்தத்தில் மூழ்கி,  சத் சித் ஆனந்தத்தில் கலந்து, சத் சித் ஆனந்தமயமாகி, வாழ்வில் பிரம்மானந்தை அடைய பரப்பிரம்மம் எனும் ஆதார சக்தி அருள் புரிவதாக.

 

Mandukya Upanishad.

 

            The great seer VedaVyasa segregated the Hindu scriptures into four Vedas 5000 years ago. While doing it, it was felt that even reading and understanding one full veda was humanly impossible. So, he further divided them into 1133 Sakhas. The wonder lies in the fact that every sakha was complete in itself as a Veda with prose, rules and regulations, rituals etc.

 

            Among the four Vedas, Atharva Veda also known as Atharva ankirasa veda was bestowed by Lord Brahma-  creator the world – to his first son Atharva. Rigveda praises this Atharva Rishi  for his discovery of ‘fire’. He is said to be the introducer of ‘fire’ to the world. Atharva Veda can verily be called “common’s Veda”. It is full of ways and means to achieve the goal of better worldly life.

 

            In that Atharva Veda, only one sakha is available today. That sakha is named as ‘Sownaka Sakha’. In that Sownaka Sakha,  5 upanishads are there. Among them, three viz, Mundaka, Mandukya and Prasna Upanishad are considered important.  We are to enter into the second one, i.e., Mandukya Upanishad right now.

 

            This Upanishad is very small in size with only 12 hymns. But, the knowledge it imparts is very high. With a single syllable ‘AUM’, this Upanishad gives out many meditation techniques and tailor fits them to any common man without any pre-requisite.

 

            Mandukya means ‘frog’. As frog is capable of living in water and land, this Upanishad paves path for enlightenment for every common man adjusting itself to his capacity and quest.

 

            Let us move into the Upanishad and enjoy.

 

            May Almighty shower its grace on one and all . May the reader be in and with equanimity and become equanimous, enjoying the eternal Bliss in his life.

 

 

Upanishad Comments differ from Sri Adi Sankaracharya.

 

bottom of page