top of page

 इति उपनिषत संस्क्रुत रुपम्

        உபநிஷதத்தின் தமிழ் விளக்கத்தினைப் படிக்க மற்றும் பதிவிறக்கம் செய்ய இந்த கோப்பைத் திற்க்கவும்

Dear Reader, Please click this PDF Folder to read this Upanishad with my comments in English

                                 கேன உபநிஷதம் - ஒரு அறிமுகம்.

 

 

              வேதவ்யாச பகவான் வேதங்களை பிரித்தளித்த போது> அந்த வேதங்களைப் பல்வேறு சாகைகளாகப் பிரித்துள்ளார். ஒவ்வொரு சாகையும் ஒரு வேதம் என்றே சொல்லுமளவிற்கு அவற்றின் கட்டமைப்பு உள்ளது. நச்சினார்க்கினியர் எனும் உரையாசிரியர் தொல்காப்பியத்திற்கான தனது உரையில தமிழ் தேசத்தில் வழங்கிவந்த சாகைகளையே வேதங்கள் எனக் குறிப்பிடுகின்றார்.

 

      அவ்வாறு பகுத்தளிக்கப்பட்டவை மொத்தம் 1133 சாகைகள் என சான்றோர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் பல சாகைகள் வழக்கொழிந்துப் போய்> தற்போது ஏறக்குறைய 6 சாகைகளே வழக்கில் உள்ளன.

 

      சாம வேதம் 1000 சாகைகள் கொண்டது என்று தெரிகிறது. அவற்றுள் 997 காலத்தால் அழிந்து தற்போது மூன்று சாகைகளே கிடைத்துள்ளன. அந்த சாம வேதத்தில் வரும் ஒரே முக்கிய உபநிஷதம் இது. சாம வேதம் பொதுவாக இசையுடன் இணைந்து திகழ்வது. இந்த உபநிஷததிலும் பல இடங்களில் சந்தத்தின் ஒழுங்கையும்> வார்த்தை விளையாட்டுக்களையும் பார்க்க முடிகிறது. யாரால்? என்ற கேள்வியை எழுப்பி, அறிவு பூர்வமாக பிரம்மத்தை விளக்க முயற்சிக்கும் உபநிஷம் இது.

 

      வார்த்தைகளாக அல்லாமல் வாழக்கையாக உபநிஷதக் கருத்துக்களை ஏற்பவன் சத் சித் ஆனந்தத்தில் மூழ்கி,  சத் சித் ஆனந்தத்தில் கலந்து, சத் சித் ஆனந்தமயமாகி, வாழ்வில் பிரம்மானந்தை அடைய பரப்பிரம்மம் எனும் ஆதார சக்தி அருள் புரிவதாக.

 

                                                    Kena Upanishad – an introduction

The great seer VedaVyasa segregated the Hindu scriptures into four Vedas 5000 years ago. While doing it, it was felt that even reading and understanding one full veda was humanly impossible. So, he further divided them into 1133 Sakhas. The wonder lies in the fact that every sakha was complete in itself as a Veda with prose, rules and regulations, rituals etc.

 It was told that Sama Veda was with 1000 sakhas. But, 997 were lost and only 3 sakhas are available today. Only one important Upanishad  is from Sama Veda and that is this ‘Kena Upanishad’.  This Upanishad raises a question “By whom” about the creation of cosmos and tries for intellectual explanation of Brahmam or the Ultimate. Sama Veda gives importance to the tunes and rhythm.  This rhythm and ‘playing with words’ can be seen in this Upanishad also.

However, above such rhythm and all, mere reading or literal /intellectual understanding of the philosophy is of no use. Only practical and personal experience of the Ultimate Bliss i.e., Enlightenment is the goal.

Let us move into the Upanishad and enjoy.

            May Almighty shower its grace on one and all . May the reader be in and with equanimity and become equanimous, enjoying the eternal Bliss in his life.

 

 

 

Upanishad Comments differ from Sri Adi Sankaracharya.

 

bottom of page